குறைந்த விலையில் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்-னா அது இந்த கார் மட்டும்தான்..!

பாதுகாப்பான டாடா காரை வாங்க ஷோரூம்களில் அலைமோதும் கூட்டம்… விலை இவ்ளோதானா… அப்ப கண்ண மூடிட்டு வாங்கலாம்! இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி டாடா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 7,381 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் டாடா டியாகோ கார் 5வது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் இதன் மூலமாக டாடா டியாகோ கார் விற்பனையில் சிறிய அளவில் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 7,366 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இது நடப்பாண்டு மார்ச் மாதம் 7,381 ஆக உயர்ந்துள்ளது. இது மிக சிறிய அளவிலான வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் இது ஐசி இன்ஜின் மாடலின் விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் டாடா டியாகோ கார், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV), அதாவது எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.89 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh ஆகியவை ஆகும். இதில், 19.2 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 250 கிலோ மீட்டர்கள் ஆகவும், 24 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது. பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பும்போது பயணம் செய்யக்கூடிய தொலைவுதான், டிரைவிங் ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில், டாடா டியாகோ இவி-யும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் ஐசி இன்ஜின் மாடலை பொறுத்தவரையில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் டாடா டியாகோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். டாடா டியாகோ ஐசி இன்ஜின் காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இதன் சிஎன்ஜி மாடல்களிலும், 1.2 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. டாடா டியாகோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய சந்தையில் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படக்கூடிய கார்களில் டியாகோவும் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ கார் மிகவும் பாதுகாப்பானது. சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா டியாகோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.