அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது ஆதார் கார்டு விவரங்களை இணையதளம் மூலமாக இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து இருந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஆதார் அட்டைகளில் முகவரி மாற்றமோ அல்லது மொபைல் எண் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், ஆதார் அப்டேஷன் மையத்தில் சென்று நேரடியாகவே செய்ய முடியும். சில வங்கிகள், தபால் நிலையங்களில் கூட இந்த சேவை அளிக்கப்படுகிறது.
நேரடியாக https://myaadhaar.uidai.gov.in/ இணையதளங்களில் அப்டேஷன் செய்வதற்கு ரூ. 25 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் ஆதாா் தகவல்களை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக கட்டணமின்றி புதுப்பிக்க முடியும் என இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (UAIDAI) தெரிவித்துள்ளது. ஆதாா் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.