திருப்பதி ஏழுமலையான கோயில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டிற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்பு ஆன்லைன் தரிசன டிக்கெட்டை பெற, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை போன்றவைகளை பயன்படுத்தி பெறலாம். ஆனால், இனி இவைகளை பயன்படுத்தி பெற முடியாது. ஆதார் இருந்தால் மட்டுமே தரிசன டிக்கெட் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.