நடிகை கஸ்தூரி சிறையில் அடைப்பு: 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு

பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்புசட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில்கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி (வயது 50) கலந்துகொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசினார்.

அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனதுபேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரிபல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. அகில இந்திய தெலுங்கு சம்மேளனம்சார்பில் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது நடவடிக்கைக்கு பயந்து கஸ்தூரி தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் அவர் மீதுநடவடிக்கை எடுக்க கோரி நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மதுரை திருநகர் போலீசில்அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஸ்தூரி தலைமறைவாக இருந்தப்படி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரைஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீசாரும், மதுரைபோலீசாரும் தனிப்படை அமைத்து களம் இறங்கினார்கள்.

நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில்சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர்தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்றுகஸ்தூரியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கார் மூலம் நேற்று பகலில் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம், சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம்விசாரணை நடத்தப்பட்டது. அவர் பேசிய வீடியோ காட்சிகளை காட்டி போலீசார் விசாரணைநடத்தினார்கள். அவர் அளித்த வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை முடிந்தவுடன், அவரை எழும்பூர் 5-வது கோர்ட்டு விடுமுறை மாஜிஸ்திரேட்டு ரகுபதிராஜா முன்னிலையில் போலீசார் ஆஜர்ப்படுத்தினார்கள்.

அப்போது மாஜிஸ்திரேட்டு ரகுபதி ராஜா, நடிகை கஸ்தூரியிடம், ‘உங்களை கைது செய்துஅழைத்து வரும்போது போலீசார் துன்புறுத்தினார்களா?’ என்று கேட்டார். அதற்கு கஸ்தூரி, ‘போலீசார் நல்ல முறையில் அழைத்து வந்தனர். தொந்தரவு தரவில்லைஎன்று கூறினார்.

தொடர்ந்து அவர், மாஜிஸ்திரேட்டிடம் உருக்கமான வேண்டுகோளை வைத்து கூறியதாவது:-

நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. ஒரு சிறப்பு ஆண் குழந்தை(மாற்றுத்திறனாளி) உள்ளது. அந்த குழந்தையை ஐதராபாத்தில் படிக்க வைத்துள்ளேன். தெலுங்குபடப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தேன். நான் தலைமறைவாகவில்லை. என்னுடையசென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது.

என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவிப்புக்கு ஆளாகும். எனவே என்னைசிறையில் அடைக்காமல், ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்.

இவ்வாறு அவர் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் அவருடைய வேண்டுகோளை மாஜிஸ்திரேட்டு நிராகரித்துவிட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து நடிகை கஸ்தூரியை போலீசார் வேன் மூலம் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக அவருக்கு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைநடத்தப்பட்டது.