ஆடி வெள்ளி... வழிபடும் முறை...

ஆடி மாதம் முதல் வெள்ளி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. எனவே, இந்நாளில், அம்மனை எந்த நேரத்தில் வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? அம்மனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து நாம் பார்க்கலாம்.

ஆடி மாதம் என்பது அம்மனை வழிபட்டு, நம்முடைய பிரச்சினை அனைத்தையும் தீர்ப்பதற்கு வழிபட வேண்டிய உகந்த மாதமாகும். அதுவும் குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் சில சிறப்பு நாட்களில் அம்மனை வழிபட்டால் அதீத பலன்களை பெறலாம். அந்தவகையில், ஆடி மாதத்தில் வரும் 5 வெள்ளிகளும் தனித்தனி சிறப்புகளைக் கொண்டது. இந்நிலையில், ஆடி மாதம் முதல் வெள்ளி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. எனவே, இந்நாளில், அம்மனை எந்த நேரத்தில் வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? அம்மனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஆடி வெள்ளி வழிபாடு என்றால் என்ன?

ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட வேண்டிய ஏற்ற காலம் என்றாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பல்வேறு ரூபங்களில் இருக்கும் அம்மனை வழிபட்டு நல்ல பலன்களை பெறலாம். மேலும், ஆடி முதல் வெள்ளி அன்று முப்பெறு தேவர்களையும், சப்த கன்னியர்களையும், குலதெய்வங்களில் இருக்கும் பெண் தெய்வங்களையும் வழிபடுவது மிகவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆடி முதல் வெள்ளி எப்போது, வழிபடும் நேரம் என்ன?

ராகு காலம் நேரம் : காலை 10:30 முதல் பகல் 12 வரை

சுக்கிர ஓரை நேரம் : காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரை, பகல் 1 மணி முதல் 2 மணி வரை, இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும்.

ஆடி முதல் வெள்ளி வழிபடும் முறை?

ஆடி முதல் வெள்ளிக்கிழமைய அன்று அம்மனை இரண்டு விதங்களில் வழிபடலாம். முதலாவது கடன் பிரச்சனை தீர,தீராத நோய்கள் தீர, வழக்கு தொடர்பான பிரச்சனைகள் தீர, குடும்ப பிரச்சினைகள் தீர, அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களால் வரும் பிரச்சினைகள் தீர என இதுபோன்ற பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்று ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

அதுபோல வீட்டில் செல்வம் தங்க, மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்க, வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓலையில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.

ராகுகால வழிபாட்டு முறை:

மேலே சொன்னபடி, பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஒருவேளை உங்களால் கோவிலுக்கு சென்று வழிபட முடியாவிட்டால், வீட்டில் இருந்தபடியே செவ்வரளி பூக்களுக்கு பதிலாக அரளி பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

சுக்கிர ஓரை வழிபாட்டு முறை:

சுக்கிர ஓரை நேரத்தில் மகாலட்சுமிக்கு பால் கற்கண்டு படைத்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை நீங்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியே செய்யலாம். முக்கியமாக, கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும் அம்பாளின் அருளையும் பெறுவீர்கள். அதுபோல மாலை 6:00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வில்வ இலைகளை படைத்தும் வழிபடுங்கள்.

திருவிளக்கு பூஜை வழிப்பாட்டு முறை:

அம்மனுக்கு விளக்கேற்றி விளக்கில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நீங்கள் வீட்டில் விளக்கு பூஜை செய்வதற்கு முன் காலையில் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு வர வேண்டும். ஒருவேளை உங்களால் காலையில் செல்ல முடியாவிட்டால் மாலை வேலையில் செல்லலாம். முக்கியமாக, இந்த திருவிளக்கு பூஜையை ஆடி முதல் வெள்ளி அன்று செய்தால் அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளி வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்:

ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபட்டு வந்தால் நம்மை சுற்றியுள்ள அனைத்து தீங்கும் விலகும். ஆரோக்கியம், செல்வம், ஞானம் போன்றவை கிடைக்கும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மட்டுமே. கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவேளை உங்களால் எல்லா வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால், ஒரு வெள்ளிக்கிழமையாவது கண்டிப்பாக வழிபாடு செய்யுங்கள்.

====

Amman, Adi Velli, Worship, Kungumam, Turmeric, Karumari Amman, Mahalakshmi, Durgai Amman, அம்மன், ஆடி வெள்ளி, வழிபாடு, குங்குமம், மஞ்சள், கருமாரி அம்மன், மகாலட்சுமி, துர்க்கை அம்மன்