அமெரிக்காவின் வர்த்தக துறையின் போக்கை கணக்கிடும் ஒரு முக்கிய பொருளாதார குறியீடு (Leading Economic Index) ஜூன் மாதத்துடன் 15 மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த மாபெரும் சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நுகர்வோரின் மோசமான அவுட்லுக் மற்றும் வேலைவாய்ப்பின்மை தடாலடி உயர்வு ஆகியவை தான். 15 மாதம் தொடர் சரிவு என்பது 2007 – 2009 ரெசிஷன் காலக்கட்டத்தில் இருந்து மோசமான பொருளாதாரத்தை குறிக்கிறது.
இந்த நிலையில் தி கான்பிரென்ஸ் போர்டு என்னும் அமைப்பு அமெரிக்காவின் எதிர்கால பொருளாதாக செயல்பாட்டை ஆய்வு செய்யும் முக்கியமான பொருளாதார குறியீடு ஜூன் மாதத்தில் 0.7 சதவீதம் குறைந்து 106.1 சதவீதமாக குறைந்துள்ளது. இக்குறியீடு மே மாதம் 0.6 சதவீதம் குறைந்திருந்தது. ஜூன் மாதம் கணிப்பை கட்டிலும், மே மாத தரவுகளை காட்டிலும் அதிகமாகியுள்ளது கூடுதல் கவலை அளிக்கிறது.
ஜூன் மாதம் தரவுகள் உடன் கடந்த 15 மாத தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது அடுத்த சில மாதங்களுக்கும் அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்படுவதாக தி கான்பிரென்ஸ் போர்டு என்னும் அமைப்பின் business cycle indicators பிரிவின் உயர் தலைவரான Justyna Zabinska-La Monica தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தற்போதைய நிலவரத்தின் படி அமெரிக்காவின் பொருளாதாரம் 3வது காலாண்டு முதல் 2024 முதல் காலாண்டுக்குள் ரெசிஷனுக்குள் தள்ளப்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, இறுக்கமான நாணய கொள்கை, கடன் பெறுவதில் கடினமான சூழ்நிலை, அரசின் செலவுகளை குறைத்தது ஆகியவை அமெரிக்க பொருளாதாரத்தை ரெசிஷனுக்குள் தள்ளியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த உள்ளதால் விரைவில் வட்டி உயர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதேவேளையில் இங்கிலாந்து மத்திய வங்கி (BoE) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவையும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகின்றன.
இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாக ஆகியவை தனது பணவீக்க இலக்கான 2% அடைய திட்டமிட்டு உள்ளது. சீனாவின் மந்தமான பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பல சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் தற்போது பத்திர சந்தைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Source: Google Return