மிக குறைந்த விலையில் மணிக்கு 70 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் கார்.. - பஜாஜ் அறிமுகம்!

இன்றைக்கு ஒருபுறம் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் எலெக்ட்ரிக் கார், பைக், ஸ்கூட்டர் போன்றவை அதிகளவில் மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்தாலும் சில நேரங்களில் இதன் விலைத் தான் மக்களை சற்று பின்னோக்குகிறது. இதை முறியடிக்கும் விதமாகத் தான், பஜாஜ் நிறுவனம் புதிய மாடல் கார்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளது. பஜாஜ் க்யூட்டின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பை கொண்டு வர தயாராக உள்ளது. இதோ இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த முழு விபரம் இங்கு பார்க்கலாம்.

புதிய Bajaj Qute எலெக்ட்ரிக் கார்:

கார்களில் பயணிக்கும் போது குறுக்கலான பாதைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் வந்தாலே கார்களில் கீறல் எதுவும் ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்படும். ஆனால் தற்போது பஜாஜின் புதிய எலெக்ட்ரிக் கார்களில் இந்த பிரச்னை எதுவும் இல்லை. மெட்ரோ நகரங்களில் கூட குறுகிய தெருக்கள் மற்றும் நெரிசலான இடங்கள் வழியாக யார் வேண்டுமானாலும் பயணிக்கும் வகையில் இந்த காரான வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் இதை கடந்த 2018ல் முதல் முறையாக ரூபாய் 2.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியது. தற்போது புதிய Bajaj Qute க்கு ஜனவரி 2023 இல் அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றது. புதிய Qute (RE60) ரூ. 3.61 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வணிக பயன்பாட்டிற்கு (commercial use) மட்டுமே இது கிடைக்கிறது. இதன் எடை சுமார் 451 கிலோ ஆகும்.

மணிக்கு 70 கிமீ வேகம் :
இந்த புதிய ரக கார், 4 இருக்கைகளோடு நிலையான ரூப் (fixed roof), வசதியான சஸ்பென்ஷன்(comfortable suspension) மற்றும் மணிக்கு 70 கி.மீ வேகத்துடன் இயங்கும். சமீபத்திய அறிக்கையின் படி, இந்த கார் 12.8 பிஎச்பி ஆற்றலைப் பெறும். நிறுவனம் அதன் CNG பதிப்பையும் கொண்டு வரலாம். இந்த காரில் ஸ்லைடிங் ஜன்னல்கள் இருக்கும் மற்றும் இது 216 சிசி சிங்கிள் சிலிண்டர் ஹை பவர் இன்ஜினுடன் வரக்கூடும். பஜாஜின் புதிய எலெக்ட்ரிக் கார் 16.1 என்எம் மற்றும் ரிவர்ஸ் கியர் கொண்ட ‘எச்’ பேட்டர்ன் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் காருக்கு 20 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை குவாட்ரி சைக்கிள் எனப்படும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சிறிய ரகக்கார்களுக்கு அனுமதி முன்னதாக மறுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து தான் பஜாஜ் நிறுவனம் தனது புதிய Bajaj Qute க்கு ஜனவரி 2023இல் அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றது.