முகம் என்பது மிக முக்கிய பகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒருவரின் முக பாவனைகளை வைத்தே அவர் என்ன நினைக்கிறார்… என்பதை கணிக்கும் அளவிற்கு நம் முகத்தின்மீது அதிக கவனம்
செலுத்துகின்றோம். ஆண்களை விட பெண்களே முகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக பலரும் எண்ணுகின்றனர். ஆனால் இன்றைய கணினி காலத்தில் அவற்றின் மரபு சற்றே மாறி வருகின்றது என்றால் அதில் மிகை ஏதுமில்லை. பெண்களை போலவே ஆண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள், அவ்வளவுதான்.
இதில் அதிர்ச்சியடைய எந்தவித விஷயமும் இல்லை. மேலும் சற்றே வித்தியாசமான ஆண்களையே பெண்களும் விரும்புகிறார்கள். இதுவும் அவர்கள் மீது அதீத ஈர்ப்பு வர காரணமாக இருக்கிறது என்றே கூறலாம். ஃபேஷன் போன்ற அழகியல் துறைகளிலும் ஆண்களும் அதிக அளவில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். குறிப்பாக இப்போதெல்லாம் பழங்காலத்து அழகியல் முறைகளை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இது ஒருவகையான ட்ரெண்டிங்காகவே மாறி வருகிறது. இந்த பதிவில் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு தருகிறது என்பதை பார்ப்போம்.
முக அழுக்குகளை நீக்க!
ஆண்கள் அதிகம் வெளியில் சுற்றுவதால் அவர்களின் முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து விடுகிறது. இதனால் முகத்தில் பலவித பிரச்சினைகள் வருகிறது. இதனை சரி செய்ய பழங்காலத்தில் இந்த ஆயர்வேத முறையைத்தான் பயன்படுத்தினார்கள். 1 டேபிள்ஸ்பூன் ஆரஞ்ச் பவ்டரை 2 டேபிள்ஸ்பூன் யோகர்டுடன் நன்கு கலந்து முகத்தில் பூச வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலச வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
இளமைக்கு பசும்பால் நெய்!
முகம், என்றும் பதினாறு போல இளமையாக இருக்க வேண்டுமா..? அதற்கு ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. 1/2 டீஸ்பூன் பசும்பால் நெய்யுடன் 1/2 டீஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசினால் முகத்தின் செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தை இளமையக வைக்கும் collagen என்ற மூல பொருளை அதிகரிக்க செய்யும்.
உடனடி பொலிவிற்கு துளசி!
ஏதேனும் விழா நாட்களில் முகத்தை உடனடியாக அழகுபடுத்த பல வேதி பொருட்களை பயன்படுத்தி முகத்தின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறீர்களா..? இனி அந்த கவலையே வேண்டாம். துளசி இருக்க பயமேன்…! முகத்தின் உடனடி அழகிற்கு துளசி நன்கு உதவுகிறது. முகம் பொலிவடையவும், எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருக்கவும் இந்த துளசி உங்களுக்கு இதுவும். ஒரு கைப்பிடி துளசி எடுத்து நன்கு அரைத்து, அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசினால் முகம் உடனடி அழகு பெரும்.
முகப்பருவிற்கும் ஆயர்வேதா!
ஹார்மோன்களின் வேறுபாட்டால் ஆண்களின் முகத்தில் பருக்கள் வர தொடங்கும். இது அவர்களுக்கு அழகு சார்ந்த பல பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். இதனை சரி செய்ய இந்த ஆயர்வேத முறை போதும். 1 டேபிள்ஸ்பூன் சந்தன பவுடர், 1/2 மஞ்சள், 2 டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து போகும்.
கரும்புள்ளியை போக்கும் கடலை மாவு!
அதிக அழுக்குகள் முகத்தில் சேர்நது அவை கரும்புள்ளிகளாக மாறி விடுகின்றது. இதனை சரி செய்ய ஒரு வழி இருக்கிறது. 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் பால் அல்லது யோகர்ட் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
மினுமினுப்பான முகத்திற்கு சீமை சாமந்தி!
பல ஆண்களின் முகம் கலை இழந்து மங்கலாக தெரியும். இதனை சரி செய்ய, 1 கப் சீமை சாமந்தி டீ , 1 டேபிள்ஸ்பூன் முல்தானி மட்டி, 2 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசவும். பிறகு காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் மினுமினுப்பாகும்.
ஈரப்பதமான முகத்தை பெற!
வறண்ட முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க இந்த ஆயர்வேத முறை நன்கு பயன்படும். 1 டீஸ்பூன் வெள்ளை சந்தன பவ்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பவ்டர், 1/2 டீஸ்பூன் பால், 1/2 டீஸ்பூன் யோகர்ட் போன்றவற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
வெளிர்ந்த முகத்திற்கு குங்குமப்பூ!
முகம் மிகவும் வெளிர்ந்து காணப்படுகிறதா! இதனால் முக அழகு கெடுகிறதா? இதனை குணப்படுத்த இந்த ஆயுர்வேத முறையே போதும். சிறிது குங்குமப்பூ, 1 டீஸ்பூன் பால், 1 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி இரவு முழுக்க அப்படியே விட்டு, அடுத்த நாள் காலையில் முகத்தை கழுவினால் வெளிர்ந்த முகம் சரியாகும்.