நீங்கள் அல்லது உங்கள் நெருங்கிய உறவினர், நண்பர்கள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மேலும் இந்த தொலைபேசிகள் அவற்றில் கொடுக்கப்படும் அம்சங்கள், கேமரா தரம் மற்றும் குறிப்பாக பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஹை-என்ட் யூஸர்களிடையே பிரபலமாக உள்ளன.
தனது பெயரை காப்பாற்றி கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனமும் தனது ஐபோன் யூஸர்களுகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க அவ்வப்போது அப்டேட்ஸ்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இந்திய ஐபோன் யூஸர்களுக்கு ஒரு செக்யூரிட்டி வார்னிங்கை வெளியிட்டுள்ளது.
ஐபோன் யூஸர்கள் உஷாராகாவிட்டால் ஹேக்கர்கள் யூஸர்களின் டிவைஸை முழு கட்டுப்பாட்டில் எடுக்ககூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. CERT-In தனது அதிகாரபூர்வ வெப்சைட்டில் லேட்டஸ்ட் ஐபோன்கள் மட்டுமல்ல iPhone 6s, iPhone 7 series, iPhone 8 series, iPhone SE first-gen உள்ளிட்ட பழைய மாடல்களும் பாதிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளது. எனவே ஐபோன் யூஸர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் போனை அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. iPad Air, Pro மற்றும் Mini உள்ளிட்ட iPad யூஸர்களும் iPadOS-ன் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கெர்னலில் உள்ள “improper input validation” மற்றும் வெப்கிட்டில் உள்ள “improper state management in issues” காரணமாக Apple iOS மற்றும் iPadOS-ல் பாதிப்புகள் இருப்பதாக CERT-In கூறுகிறது. kernel என்பது எந்த ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டமின் core-ஆக உள்ளது, அதே சமயம் WebKit என்பது Apple Safari பிரவுசரின் முக்கிய டெக்னலாஜியாகும். ஒருவேளை இவற்றில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக ஹேக்கர்களின் தாக்குதலுக்கு யூஸர்களின் டிவைஸ் பாதிக்கப்பட்டால், மோசடி நபர் arbitrary code-ஐ எக்ஸிகியூட் செய்ய முடியும். அதாவது குறிப்பிட்ட டிவைஸின் முழுக்கட்டுப்பாட்டையும் ஹேக்கர் பெறலாம். எனவே இந்த சிக்கலை CERT-In, “ஹை வார்னிங்” என அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கான புதிய iOS அப்டேட்ஸ்களை வெளியிடத் தொடங்கிய சில நாட்களுக்கு பின் இந்த எச்சரிக்கை தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனமானது iOS 15.7.7 மற்றும் iPadOS 15.7.7 அப்டேட்ஸ்களை iPhone 6s (அனைத்து மாடல்கள்), iPhone 7 (அனைத்து மாடல்கள்), iPhone SE (1st generation), iPad Air 2, iPad mini (4th generation) மற்றும் iPod touch (7th generation) ஆகியவற்றுக்காக வெளியிட்டுள்ளது. அதே போல iOS 16.5.1 அப்டேட்டை தகுதியான iPhone யூஸர்களுக்காக ஆப்பிள் வெளியிட தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அப்டேட்ஸ்கள் யூஸர்களை பாதுகாக்க பொருத்தமான செக்யூரிட்டி பேட்ச்களுடன் வருகிறது. எனவே யூஸர்கள் உடனடியாக லேட்டஸ்ட் அப்டேட்ஸை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
இதற்கிடையே புதிய iOS அப்டேட்ஸ்கள், ஹேக்கர்களால் சிஸ்டம் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்கான தீர்வுகளுடன் வருவதாக ஆப்பிள் நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. எனவே ஹேக்கர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஐபோன் யூஸர்கள் உடனடியாக தங்கள் டிவைஸை அப்டேட் செய்யும்படி CERT-In வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளது.