அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை பெற வேண்டுமா?

இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) வெளியுறவு அமைச்சகம் அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான a2ascholarships.iccr.gov.in இல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

பதிவு செயல்முறை பிப்ரவரி 20 அன்று தொடங்கியது, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ICCR A2R போர்ட்டல் இப்போது வேட்பாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மே 31 வரை தகவல் தெரிவிக்க பல்கலைக்கழகங்களுக்கு அவகாசம் உண்டு.

நடுத்தர வகுப்புக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் படிக்க நிதி உதவி வழங்குவதற்காக, அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்காலர்ஷிப் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்காலர்ஷிப் 2022-23க்கு தேசிய ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் அடல் பிஹாரி வாஜ்பாய் உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.

எந்தவொரு மாணவரும் தவறான விவரங்களை நிரப்பினால், விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும்.
அடல் பிஹாரி வாஜ்பாய் உதவித்தொகை தகுதிக்கான அளவுகோல்கள் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு விண்ணப்பிப்பது நல்லது. விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.