Accenture நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களே உஷார்!

டிவிட்டர், மெட்டா, கூகுள் என உலக அளவிலான பெரு நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கடந்த ஜனவரியில் 18000 பேரை பணி நீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மேலும் 9000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் அக்சென்சர் நிறுவனம் இன்று சுமார் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் தனது வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் கூறியுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2.5 சதவீதம் என தெரிகிறது. மேலும் அந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி என்பது உள் நாட்டு கரன்சி மதிப்பில் 8 முதல் 19 சதவீதம் வரை இருக்கும் எனவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு காலாண்டுக்கான வருவாய் 16.1 பில்லியன் டாலர்கள் மற்றும் 16.7 பில்லியன் டாலர்களாக இருக்கக் கூடும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.