மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கோடை காலம் முடிந்து தற்போது பருவ மழைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக மழை பொழிய தொடங்கி உள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலத்தின் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்பு தொற்று 2ம் நாளாக 13,000 ஐ தாண்டி 13,490 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகள் மத்தியில் அதிவேகத்தில் காய்ச்சல் பரவி வருகிறது.
இதேநிலை நீடித்தால் அண்டை மாநிலமான தமிழகத்திலும் காய்ச்சல் தொற்று விரைவில் பரவி விடும் நிலை உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு முழு நேரமாக செயல்பட்டு வரும் நிலையில், தொற்று பாதிப்பு அதிக வேகத்தில் தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகும் வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடத்தக்கது.