முன்னணி தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் தற்போது ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடங்கலள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://ibegin.tcs.com/iBegin/jobs/287702J?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
டாட்டா கன்சல்டன்சி சர்வீஸஸ் லிமிடெட் (Tata Consultancy Services, டிசிஎஸ் ) என்ற நிறுவனம் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரைச் சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் பட்டியலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.
டிசிஎஸ் நிறுவனமானது, ஆற்றல், தொலைத்தொடர்புகள், நிதிச் சேவைகள், உற்பத்தி, வேதிப் பொருட்கள், பொறியியல், மூலப்பொருட்கள், அரசுத்துறை, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் இந்தியாவின் மிகப்பெரியதும் பழமையானதுமான தொழில் குழுமங்களுள் ஒன்றான டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த பெருமைவாய்ந்த டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் தான் தற்போது ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது..
ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த இன்ஜினியரிங் (Engineering) பாடப்பிரிவில் பி.இ., பி.டெக் (BE / B.Tech) முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.
ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடத்துக்கான அனுபவம்:
ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 4 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் தேவை.
ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடத்துக்கான சம்பளம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் டிசிஎஸ்(TCS) நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடத்துக்கான தேர்வு முறை:
இந்த டிசிஎஸ் (TCS) நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, திறனறி தேர்வு (Written Test, Interview, Skill Test) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஸ்டோரேஜ் அட்மின் (Storage Admin) பணியிடத்துக்கான விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். வரும் 29-ம் தேதி (29.12.2023) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு https://ibegin.tcs.com/iBegin/jobs/287702J?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.