சுட்ட கத்திரிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1 பெரியது
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
முழு பூண்டு – 1
ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், ஓமம், மிளகு, தனியா வறுத்து பொடித்தது) – 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டி
புளி பேஸ்ட் – 1 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் (ஆப்ஷனல்) – 1 மேஜைகரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்து – 1 மேஜைகரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ¼ கப்
பெருங்காயம் – சிட்டிகை
வர மிளகாய் – 2

செய்முறை:

* கத்தியால் கத்திரிக்காய் மேல் ஆழமாக நீளமாக 4-5 இடத்தில் கீறிக்கொள்ளுங்கள்
* 2 கீரளில் மிளகாய் சொறுகிக்கொள்ளுங்கள்.
* வெங்காயம் மேல் ஆழமாக நீளமாக 4-5 இடத்தில் கீறிக்கொள்ளுங்கள்.
* மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்டேண்ட் வைத்து கத்தரிக்காய், பூண்டு, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நன்கு சூட்டுங்கள்.
* இடுக்கியால் tongs பிடித்து அப்போ அப்போ திருப்பி சுடுங்கள்.
* தோல் கருகிய பின் எடுத்து ஆற வைக்கவும்.
* பின் தோல்களை உரித்து எடுக்கவும்.
* தோலுரித்த பொருட்களை ஒரு பௌவுலில் சேர்த்து ஸ்மேஷ் செய்யவும்.
* சுத்தமான கையால் அல்லது ஸ்பூனால் நன்றாக ஸ்மேஷ் கொள்ளவும்.
* புளி, உப்பு, மஞ்சள் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் பொடி சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
* விருப்பமானால் பொடித்த வெல்லம் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
* மிதமான அடுப்பில் ஒர கடாய் வைத்து 1 மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து, பொறிந்ததும் உளுந்து சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.
* தாளித்த பொருட்களை தயாரித்து வைத்துள்ள கத்தரிக்காய் துவையலுன் சேர்த்து கொள்ளவும்
* இதோ சுவையான கத்தரிக்காய் துவையல் ரெடி.
* இந்த துவையலை சாதம், தோசை, சப்பாத்தி, அடை, உப்புமா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடம் சுவையை சொல்லவா வேண்டும்.

====

Eggplant, dhuvayal, cook, chutney, rice, food, கத்திரிக்காய், துவையல், சமையல், சட்னி, சாதம், உணவு