பென்சன் உயர்வு..! வெளியான புதிய உத்தரவு..

அதிக EPFO பென்சன் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, விண்ணப்பம் பெற்ற தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து செயல்படுத்தப்பட வேண்டும் என EPFO நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது. தகுதியானவர்கள் EPFO அதிக பென்சன் பெற விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்யும்படி கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் EPFO நிறுவனமும் அதிக பென்சனுக்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

2014 செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பாக EPFO உறுப்பினராகவும், EPS பயனாளியாகவும் இருந்தவர்கள், தொடர்ந்து பணியில் இருந்துகொண்டு, அதிக பென்சன் பெற விண்ணப்பிக்காமல் போயிருந்தால் அவர்கள் இப்போது அதிக பென்சன் பெற விண்ணப்பிக்கலாம். EPFO அதிக பென்சன் பெற விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி மே 3ஆம் தேதியாக இருந்தது. பின்னர் கடைசி தேதியை ஜூன் 26ஆம் தேதிக்கு EPFO நிறுவனம் நீட்டித்தது. எனவே, அதிக பென்சன் பெற விரும்புவோர் ஜூன் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை பெற்ற தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் அந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டு, தவறுகள் இருப்பின் திருத்தப்பட வேண்டும் என EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.