உடலுக்கும், எலும்புக்கும் பலமளிக்கும் 'கருப்பு உளுந்து சோறு'

தமிழகத்தின் பாரம்பரிய உணவு உளுந்து சோறு. இதை அரிசி மற்றும் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யவேண்டும். முழு உளுந்து அல்லது உடைத்த உளுந்து இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இதை துவையல் மற்றும் அசைவ கிரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம். கருப்பு உளுந்து பெண்களுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் வலுப்பெற உதவுவது கருப்பு உளுந்து.

தேவையான பொருட்கள்

அரிசி – முக்கால் கப்
உளுந்து – அரை கப்
பூண்டு – 8 பல்
சுக்கு – கால் ஸ்பூன்
தேங்காய் – அரை கப் (துருவியது)
பனைவெல்லம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசி, உளுந்து இரண்டையும் நன்றாக கழுவவேண்டும். குக்கர் அல்லது பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க வேண்டும். அதில் அரிசி, உளுந்து, பூண்டு, தேங்காய், சுக்கு, பனைவெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். மீண்டும் கொதிக்க விடவேண்டும். பாத்திரத்தில் சமைத்தீர்கள் என்றால் குறைவான தீயில் முக்கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும். நீங்கள் குக்கரில் சமைத்தீர்கள் என்றால் குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விடவேண்டும். குக்கரில் அழுத்தம் குறைந்ததும் சாதத்தை எடுக்கவேண்டும். சமைத்த சாதத்தை நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து சிறிது நேரம் ஊறவைப்பது, வேகும்போது இரண்டும் மலர்ந்து வர நன்றாக இருக்கும். இதற்கு துவையல், ஏதேனும் கிரேவி அல்லது மீன் குழம்பு சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
உளுந்து வீட்டில் பருவமடைந்த பெண்களின் உணவில் அடிக்கடி சேர்க்க வேணடும். அவர்களுக்கு எலும்பை வலுவாக்க உதவுகிறது. எனவே இதை அடிக்கடி உணவில் உளுந்தம் சோறு சேர்த்துக்கொண்டால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.