பொதுவாக காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்குக்கு மிகவும் நல்லது. இதையே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தினம் தினம் குறைந்தது இரண்டு மூன்று காய்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் பீன்ஸ் காரட் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்க. காரட் பீன்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கேரட், பீன்ஸ், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலை பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய், பெருங்காயம், தேங்காய் எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை
அரை கிலோ கேரட் மற்றும் பீன்ஸை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பீன்ஸை நார் நீங்கி குட்டி குட்டியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். காரட்டையும் நுனி நீக்கி பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை நன்றாக சூடாக்க வேண்டும். அதில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். அதில் 100 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் நீங்கி பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் அதில் கேரட் மற்றும் பீன்ஸை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். நன்றாக சுண்டிய பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். அதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் மூடி போட்டு வேக விட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தேங்காய், பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த பொருட்களையும் பீன்ஸ் காரட் உடன் சேர்த்து கலந்து வேக விட வேண்டும்.
பீன்ஸ் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி வரும் போது நன்றாக சுருட்டி விட வேண்டும். கடைசியாக அதில் பச்சை கறிவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்த்து இறக்கி விடலாம். ருசியான பீன்ஸ் காரட் பொரியல் ரெடி
வீட்டில் அடிக்கடி பீன்ஸ் காரட் பொரியல் செய்து இருந்தாலும் இப்படி செய்தால் ருசி வித்தியாசமாக இருக்கும். இந்த காரட் பீன்ஸ் பொரியல் காரக்குழம்பு சாம்பார், வத்தல் குழம்பு என எல்லாவற்றிற்கும் சரியான காமினேஷன்.