ஒரு கேரட் இருந்தால் வீட்டிலேயே சூப்பரா கோல்டன் பேசியல் பண்ணலாம். இத ஒரு முறை ட்ரை பண்ணா இனி பியூட்டி பார்லர் போகனும் நினைக்கவே மாட்டீங்க.
இப்போதெல்லாம் அழகிற்காகவே பெருமளவு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். முகத்தை அழகாக்க வேண்டும் என்றால் முதலில் பார்லர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது. இனி முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்றால் பார்லர் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே ஒரு அருமையான பேசியலை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பேசியல் செய்வதற்கு முதலில் ஒரு கேரட்டை எடுத்து சுத்தம் செய்து துருவி அதை சாறு பிழிந்து, ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை வைத்து தான் இப்போது பேஷியல் பேக்கை தயார் செய்யப் போகிறோம்.
பேசியல் செய்வதற்கு முன்பு முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸையும் சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து இரண்டு நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்த பிறகு, காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தின் மேலே படிந்திருக்கும் தூசு, அழுக்குகள் போன்றவை எல்லாம் வெளியேறி விடும்.
அடுத்ததாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, அரிசி மாவு இல்லை என்றால் அதற்கு பதில் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து கலந்த பிறகு, முகத்தில் தேய்த்து ஒரு நிமிடம் தேய்த்து கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் வெளியேறுவதுடன் கருத்திட்டுகள், கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுக்கள், அனைத்தும் வெளியேறி விடும். முகத்தில் அதிகம் முகப்பரு உள்ளவர்கள் இந்த முறையை மட்டும் தவிர்த்து விடுங்கள்.
இப்போது நிறத்தைக் கூட்டுவதற்கான அந்த பேக்கை தயார் செய்து விடலாம். இதை செய்வதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் கேரட் ஜூஸ் அனைத்தையும் நன்றாக கலந்த பிறகு, உங்கள் முகத்தில் இதை தேய்த்து ரெண்டு நிமிடம் வரை மெதுவாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு பத்து நிமிடம் வரை முகத்தில் அப்படியே இருக்கட்டும்.
அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இதை செய்யும்போதே உடனடியாக முக நிறம் கூடி வெள்ளையாக இருப்பதை உங்களால் நிச்சயமாக உணர முடியும். இவை அனைத்தையும் செய்து முடித்த பிறகு, உங்கள் வீட்டில் மாஸ்டரைசர் இருந்தால் அதை லேசாக முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் ஒரே ஒரு சொட்டு எடுத்து முகம் முழுவதும் தேய்த்து விட்டால் போதும்.