ஜியோவுக்கே டஃப் கொடுக்கும்படி லைவ் டிவி சேனல்கள், ஃபைபர் இன்டர்நெட், 4 சிம் கார்டுகளுக்கு மொபைல் டேட்டா, ஓடிடி சப்ஸ்கிரிப்சன் என்று ஒட்டுமொத்த சலுகைகளும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2,299 மதிப்புள்ள ஒரே திட்டத்தில் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் 4ஜி சேவைக்கு பின்பு, மக்களிடையே தடையில்லா இன்டர்நெட் மற்றும் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதீத வளர்ச்சி அடைந்துவிட்டது. இதனால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் (Prepaid), போஸ்ட்பெய்ட் (Postpaid) மற்றும் ஃபைபர் திட்டங்களில் ஓடிடி சலுகைகளையும் வழங்கத் தொடங்கி விட்டன.
அதே வேளையில் ஓடிடி மற்றும் டிடிஎச் சேவைகளையும் இணைக்கும் திட்டங்களையும் கையில் எடுத்து வருகின்றன. அந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனமானது, ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டங்கள் மூலம் டிடிஎச், ஓடிடி, ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் கனெக்சன் போன்ற அனைத்து சலுகைகளையும் ஒரே பிளானின் கீழ் கொண்டுவந்து அசத்தி வருகிறது. இதில் மிகவும் பிரபலமடைந்துவரும் ரூ.2,299 திட்டத்தைப்பற்றி தெரிந்து கொள்வேம்.
ஏர்டெல் ரூ 2299 திட்ட விவரங்கள் (Airtel Rs 2299 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி (OTT), டிடிஎச் (DTH), ஃபைபர் (Fiber), லேண்ட்லைன் கனெக்சன் (Landline) மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் (Postpaid Mobile) ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 300Mbps வேகத்தில் ஃபைபர் இன்டர்நெட் சேவை கிடைக்கும்.
அதோடு லேண்ட்லைன் கனெக்சன் (Landline Connection) கொடுக்கப்படும். இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை செய்துகொள்ள முடியும். இந்த லேண்ட்லைன் கனெக்சனுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதுமட்டுமல்லால், ரூ.350 மதிப்புள்ள டிடிஎச் சலுகையின் அடிப்படையில், லைவ் டிவி சேனல்களை பார்த்துகொள்ளலாம்.
இதற்காக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் (Airtel Xstream Box) கொடுக்கப்படும். இதற்கான பணத்தையும் கட்ட வேண்டியதில்லை. அதேபோல 1 பிரைமரி மற்றும் 3 போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகிறது. மொத்தமாக 240 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதை நான்கு சிம் கார்டுகளிலும் பிரித்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதுவும் ஏர்டெல் சிம் கார்டுகளாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சப்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படும்.
இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பில், சோனி லிவ் (SonyLiv), லயன்ஸ் கேட் (Lions Gate), ஈராஸ் நவ் (Eros Now) போன்ற ஓடிடி தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். சொல்லப்போனால், ஒரு வீட்டுக்கு தேவையான டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள், இன்டர்நெட், மொபைல் கனெக்சன் மற்றும் லேண்ட்லைன் கனெக்சன் போன்ற அனைத்தும் ஒரே திட்டத்தின் கீழ் வந்துவிடுகிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
அதோடு 90 நாட்கள், 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என்று வேலிடிட்டிகளும் உள்ளன. ஆனால், இதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ.2,999 மட்டுமே வசூலிக்கப்படும். இதில் நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை தேர்வு செய்தால் மட்டுமே, லேண்ட்லைன் மற்றும் டிடிஎச் கனெக்சனுக்கான செலவை அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். மேலும் விவரங்கள் வேண்டுமென்றால், ஏர்டெல்.இன் (Airtel.in) தளத்தை அணுகி ஏர்டெல் பிளாக் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.