அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் (Alliance Francaise Of Madras) எனும் அமைப்பு 1953ல் தொடங்கப்பட்டு, கடந்த 69 ஆண்டுகளாக பாரிஸை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
135 நாடுகளில் செயல்பட்டு வரும் இவ்வமைப்பின் புதிய கட்டிடத் திறப்பு விழா, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
இப்புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன், பிரெஞ்சு கலாச்சாரத்தைப் பரப்பி வரும் பல்துறை கலைஞரும், அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் அமைப்பின் தலைவருமான பிரவின் கண்ணூருக்கு செவாலியர் டெஸ் ஆர்ட்ஸ்எட்லெட்டர் டெக்கரேஷன் எனும் விருதினை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியை சென்னை மற்றும் புதுச்சேரியின் துணை தூதர் லின் டால்போட் பார்பே மற்றும் அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.