தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக 2323 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட வாரியான காலியிட பட்டியல்களையும் அறிவித்துள்ளது.அதில் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் என்னென்ன பணியிடங்கள் காலியாக உள்ளன? அதற்கு சம்பளம் எவ்வளவு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ? கடைசி நாள் என்ன? என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிக்கை படி கோவை மாவட்ட சென்னை மாவட்ட நீதிமன்றத்தில்
நகல் பிரிவு உதவியாளர் 3
அலுவலக உதவியாளர் 6
நகல் வாசிப்பாளர் -2
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் -4
ஒளிப்பட நகல் எடுப்பவர் -1
தூய்மை பணியாளர் – 14
தோட்ட பணியாளர் -3
காவலர்/ இரவு காவலர் -35
இரவு காவலர் மற்றும் மசால்ஜி -13
காவலர் மற்றும் மசால்ஜி- 3
மசால்ஜி- 20
ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தகுதி:
நகல் பிரிவு உதவியாளர்,அலுவலக உதவியாளர் :எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்நகல் வாசிப்பாளர் , இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் :பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்பு அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்ஒளிப்பட நகல் எடுப்பவர்:பத்தாம் வகுப்பு அல்லது உயர்கல்வி அல்லது கல்லூரி சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும் மேலும் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் ஆறு மாதங்களுக்கு குறையாத செயல்முறை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்தூய்மை பணியாளர் , தோட்ட பணியாளர், காவலர், காவலர் மற்றும் மசால்ஜி,மசால்ஜி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்ஊதியம்
ஓட்டுநர் 19500 – ரூ71900
நகல் பிரிவு உதவியாளர் ரூ.15,700/- ரூ. 58,100/-
அலுவலக உதவியாளர் ரூ.15,700/- ரூ. 58,100/-
நகல் வாசிப்பாளர் ரூ.19,500/- ரூ.71,900/-
இளநிலை கட்டளை நிவ்றைவேற்றுனர் ரூ.19,000/- – 0.69,900/-
ஒளிப்பட நகல் எடுப்பவர் ரூ.16,600/- ரூ.60,800/-
தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், காவலர் , காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி பணிகளுக்கு ரூ. 15,700/- ரூ. 58,100/-
வயதுவரம்பு
விண்ணப்பதாரர்கள் 01.07 2024 தேதி அன்று 18 வயதை நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். பொது பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் போது அதிகபட்சமாக 32 வயதை தாண்டி இருக்கக் கூடாது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் போன்றவர்கள் 34 வயதை தாண்டிருக்கக் கூடாது ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்பறையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை:
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் வேலை குறித்த முழு விபரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன அந்த அறிக்கைகளை முழுவதுமாக படித்துவிட்டு சென்னை உயர்நீதிமன்ற www.mhc.tn.gov.in இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் கணினி அல்லது மணிக்கணினி மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம் தொலைபேசிக்கொண்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.விண்ணப்ப கட்டணம்
பொதுப்பிரிவு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக 500 வசூலிக்கப்படுகிறது.ஆதிதிராவிட வகுப்பினர் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்பினை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் விண்ணப்ப கட்டணத்தில் முழு சலுகை வழங்கப்படுகிறதுஇணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.05.2024தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி 29.5.2024தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இப்போதே அதன் தகுதிகளையும் பணி விபரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தொடங்கலாம்.
முக்கிய குறிப்பு
ஒவ்வொரு நீதித்துறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதால் விண்ணப்பதாரர்கள் அவர்கள் விருப்பப்படி ஏதாவது ஒரு நீதித்துறை மாவட்டத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு ஆகியவை அந்தந்த மாவட்டங்களிலோ அல்லது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பு பிரிவு நிர்ணயிக்கும் வேறு இடங்களிலோ ஒரே நாளில் நடைபெறும்.விண்ணப்பத்தில் தேர்வு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீதித்துறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு மற்றொரு நீதித்துறை மாவட்டத்திற்கு மாற்றம் செய்ய எழுப்பப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டி இருக்கும். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்ய இயலாது. அதனால் கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்.