பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்து உள்ளது. ரூ.1937-க்கு விற்ற வணிக சிலிண்டர், இம்மாதம் 8 ரூபாய் விலை அதிகரித்து ரூ.1945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், இந்த மாதம் சற்று அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.