லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர்த்தி ஐ செல்வம் இவர் பல விதமான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கின்ற லியோ திரைப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக சமூக ஆர்வலர் RTI செல்வம் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் இன்று 10 மணி அளவில் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
ஆகவே நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை கைடு செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.