தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக் கழகம், Vellore Institute of Technologyயுடன் இணைந்து கணினித் தமிழுக்கான ஒரு நிரலாக்கப் போட்டியினை (Hackathon) நடத்தியது.
கணினித் தமிழ் தொடர்புடைய செயல்பாடுகளில் இளைய சமுதாயத்தினரை ஈடுபடுத்திட, முதல் முறையாக தமிழ் இணையக் கல்விக் கழகமானது VITயுடன் இணைந்து நடத்திய நிரலாக்கப் போட்டி இதுவாகும்.
இந்நிரலாக்கப் போட்டியினை நடத்துவதற்கு 18 தலைப்புகள் கண்டறியப்பட்டன. பின்பு, VITயுடன் கலந்தாலோசித்து 8 தலைப்புகள் இறுதி செய்யப்பட்டன. அவையாவன :
* Identifying Domain Specific words,
* Tamil Alphabets Sorting,
* Naming an Object in an Image,
* Generating Subtitles in Tamil,
* Tamil Language based Message Service,
* A mobile App to Scan the Name Boards,
* Cyber Crime, Laws – IT Act,
* Enhancing learning Terminologies.
இதனைத் தொடர்ந்து 8 தலைப்புகளில் 30 திட்டங்கள் பெறப்பட்டு அவற்றுள் 19 திட்டங்கள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்நிரலாக்கப் போட்டியானது 17.12.2022 முதல் 19.12.2022 வரை நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் VIT வல்லுநர்கள் அவற்றிலிருந்து 3 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர்.
முதலிடமாகத் தேர்வு செய்யப்பட்ட Identifying context based porecedent rulings for a given case in Tamil என்ற தலைப்புக்கு ரூ.50,000/-, இரண்டாம் இடம் பெற்ற Identifying name boards on the bus. bus stop (Udhavi) என்ற தலைப்புக்கு ரூ.30,000/-, மூன்றாம் இடம் பெற்ற Sign language subtitle generator in Tamil என்ற தலைப்புக்கு ரூ.20,000/- என மொத்தம் ரூ.1,00,000/- பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேற்று (22.12.2022), தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், VIT கணினிப் பொறியியல் புல முதன்மையர் க.சுரேஷ் பாபு, VIT பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.