ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி வெளியானது... 'கூலி' Glimpse...

ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம், “கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் “கூலி” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் “கூலி” படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி கூலி படத்திலிருந்து பாடல் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 56 வினாடிகள் கொண்ட இந்த க்ளிம்ஸ் வீடியோ ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த் இன்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமான ஒரு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினி உடைய வீடியோக்கள் அதிகம் காணப்படுகிறது.

ரஜினி நடிக்கும் கூலி படத்தில் இருந்து அப்டேட்டுகளை ரசிகர்கள் நேற்றிலிருந்து எதிர்பார்த்தனர். இருப்பினும் இன்று மாலை மட்டுமே கூலி படத்தில் இருந்து அப்டேட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கூலி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் சிறு பகுதி வெளியிடப்பட்டுள்ளது.