கர்நாடக மாநிலம் கலபுர்கி நகரில் உள்ள ஓலா ஷோரூம் ஒன்றில் முகமது நதீம் என்ற 26 வயது பைக் மெக்கானிக் கடந்த மாதம் முன்பு ரூ. 1.4 லட்சம் விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார்.
வாங்கி 1-2 நாட்களிலேயே அந்த ஸ்கூட்டரில் பேட்டரி மற்றும் சவுண்ட் சிஸ்டமில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பலமுறை தனது வாகனத்தை அவர் ரிப்பேர் செய்ய வேண்டி வந்தது. தொடர்ந்து அந்த ஸ்கூட்டரை வாங்கிய ஓலா ஷோ ரூமுக்கு நடையாக நடந்துள்ளார் நதீம். ஆனால் ஷோரூம் ஊழியர்கள் சரியாக ரெஸ்பான்ஸ் கொடுக்காததால் கோபத்திலிருந்த நதீம் அவர்களுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அந்த ஷூரூமுக்கு பெட்ரோல் கேனுடன் சென்ற நதீம் உள்ளே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் ஷோரூமில் விற்பனைக்கு இருந்த 6 வாகனங்கள் கணினிகள் என அனைத்தும் முழுவதுமாக எரிந்து தீக்கிரையாகி உள்ளது. சுமார் 8.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து நதீம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஓலா இ- ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் விரக்தியில் ஸ்கூட்டரை எரித்த நிலை மாறி தற்போது ஷோ ரூமையே எரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Karnataka: Disgruntled Ola Electric customer allegedly sets showroom on fire, no casualties@moneycontrolcomhttps://t.co/kAuabJGSnM pic.twitter.com/T3VSV5UkUP
— ChristinMathewPhilip (@ChristinMP_) September 11, 2024