குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை...

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.87,000-க்கு விற்பனையாகிறது.