சுவையான கொங்கு நாட்டு கொள்ளு துவையல்...

தேவையான பொருட்கள்:
*முளைக்கட்டிய கொள்ளுப்பருப்பு/கொள்ளுப்பருப்பு – 250 கிராம்
* தண்ணீர் – தேவையான அளவு தாளிப்பதற்கு…
* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 15-20
* பூண்டு – 5 பல்
* கறிவேப்பிலை – 2 கொத்து
* பச்சை மிளகாய் – 4
* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் முளைக்கட்டிய கொள்ளு பருப்பை நீரில் ஒருமுறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை முளைக்கட்டிய கொள்ளுபருப்பு இல்லாவிட்டால் சாதாரண கொள்ளுப்பருப்பை எடுத்து நீரில் கழுவிக் கொள்ளலாம்.
* பின் அந்த பருப்பை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக, மிக்சர் ஜாரில் வதக்கி பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்தால், சுவையான கொங்குநாட்டு கொள்ளுப் பருப்பு துவையல் தயார்.