ப்ரீ பிசினஸில் 100 கோடியை நெருங்கிய தனுஷின் கேப்டன் மில்லர்!

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

கடந்த ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அவரது வாத்தி படமும் 100 கோடி கிளப்பில் இணையவுள்ளது.
நடிகர் தனுஷ் தன்னுடைய எல்லைகளை கோலிவுட்டோடு நிறுத்திக் கொள்ளாமல், பாலிவுட், ஹாலிவுட் என விரிவுப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘வாத்தி’ படம் தெலுங்கிலும் நேரடியாக சார் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் விற்பனை 100 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஓவர்சீஸ் விற்பனை 100 கோடி ரூபாய் எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாநிலங்களின் வெளியீட்டு உரிமைளும் சேரும் நிலையில், இந்த வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம்.