இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழில் ‘போடா போடி’ படம் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்திருந்தார். இந்தப் படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியபோதுதான் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலில் விழுந்தனர். இவர்களது வாழ்க்கை தற்போது திருமணம், குழந்தைகள் என்று சிறப்பாக மாறியுள்ளது.
தற்போது தங்களுடைய கேரியரில் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். குழந்தைகளிடமும்தான். எங்கே சென்றாலும் இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் இணைந்து செல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அஜித்துடனான AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அந்தப் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அடுத்தப்படத்திற்கான வேலைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது சின்னத்திரைப் பக்கம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீ தமிழ் சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறப்பான வரவேற்பை பெற்ற காபி வித் டிடி நிகழ்ச்சி போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது சின்னத்திரை பக்கமும் வந்துள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் தற்போது வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனைவரும் சிறப்பான கவனத்தை செய்து வரும்நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த மூவ், சிறப்பாகவே பார்க்கப்படுகிறது.