கலைக்கப்படும் கண்டெய்னர் மைதானங்கள்

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

இப்போட்டிகள் அல் பையத் ஸ்டேடியம், கலீஃபா இன்டர்நேஷனல் ஸ்டேடியம், அல் துமாமா ஸ்டேடியம், அகமது பின் அலி ஸ்டேடியம், லுசைல் ஸ்டேடியம், ஸ்டேடியம் 974, எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் மற்றும் அல் ஜனாப் ஸ்டேடியம் ஆகிய 8 ஸ்டேடியங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த 8 மைதானங்களுமே மறுசுழற்சி செய்யப்பட்ட சரக்கு கண்டெய்னர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

நாளை முதல் காலிறுதிச் சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ‘ஸ்டேடியம் 974’ மைதானத்தில் பிரேசில் – தென் கொரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டிதான், இம்மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியாகும்.

974 சரக்கு கண்டெய்னர்களைக் கொண்டு 40000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் துறைமுகம் அருகே கட்டப்பட்டிருந்த இந்த ‘ஸ்டேடியம் 974’ மைதானத்தின் கண்டெய்னர் பாகங்கள் தற்போது கலைக்கப்பட்டு வருகிறது.