டென்னிஸ்ல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார் ஜோகோவிச்...

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடம் பிடித்து வெற்றியை கைப்பற்றினார். 35 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நிறைவடைந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர் கைப்பற்றிய 22-வது பட்டம் இதுவே ஆகும். இதன் மூலம் 7,070 புள்ளிகளுடன் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜோகோவிச் 4 இடங்கள் முன்னேறி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

முதலிடம் வகித்து வந்த ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளாததால், தரவரிசை பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச்சிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஓர் இடம் முன்னேறி 6,195 புள்ளிளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

நார்வே வீரர் காஸ்பர் ரூட் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்த ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் ஓர் இடம் முன்னேறி 5-வது இடத்தை அடைந்தார். 2-வது சுற்றுடன் வெளியேறிய ஸ்பெயினின் ரபேல் நடால் 4 இடங்கள் பின்தங்கி 6-வது இடத்தில் உள்ளார். கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் முறையே 7 முதல் 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.

மகளிருக்கான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற பெல்லாரசின் சபலெங்கா 6,100 புள்ளிளுடன் 2-வது இடத்தில் முன்னேறியுள்ளார். போலந்தின் இகாஸ்வியாடெக் 10,485 புள்ளிகளுடன் முதலிடத்தில் தக்கவைத்துள்ளார். இதனால் துனிசியாவின் ஜபூர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4-வது இடத்துக்கும், பிரான்ஸின் கரோலின் கார்சியா 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்ரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 15 இடங்கள் முன்னேறி 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோர்.