SIP-களில் எவ்வளவு முதலீடு செய்தால் Safeனு தெரியுமா..?

SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். SIP-இல், நீங்கள் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில், சிறு தொகையை முதலீடு செய்யலாம்.

சிலர் முதல் சம்பளம் வாங்கிய கையோடு முதலீடு செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். இன்டர்நெட்டில் தகவல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், தொடக்க நிலையாளர்களுக்கு சரியான முதலீட்டு பாதையை கண்டறிவது பெரும்பாலும் கடினமானதாக இருக்கலாம். எவ்வளவு தொகையை முதலீடு செய்வது சிறந்தது என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதைத் தீர்மானிக்க கீழ்கண்ட காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.நிதி இலக்குகள்: “Financial Goals” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற நிதி இலக்குகளைத் தீர்மானியுங்கள்.

முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் நிதி இலக்குகளைத் தெளிவாக வரையறுத்துக்கொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக, 10 வருடங்களில் வீடு வாங்குவது, 15 வருடங்களில் குழந்தையின் கல்விக்கு செலவு செய்வது, 20 வருடங்களில் ஓய்வூதியம் போன்றவை உங்கள் இலக்குகளாக இருக்கலாம். ஒவ்வொரு இலக்கும் வெவ்வேறு கால அளவைக் கொண்டிருப்பதால், அவற்றை அடையத் தேவையான முதலீட்டுத் தொகையும் வேறுபடும்.வருமானமும் செலவுகளும்: உங்கள் வரவு மற்றும் செலவு போக மாத சம்பளத்தில் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்று கணக்கிடுங்கள். மாதாந்திர செலவுகளைக் கழித்த பின்னர் மீதமுள்ள தொகையில் இருந்தே முதலீடு செய்வது சிறந்தது.

SIP-கள் மாதாந்திர முதலீட்டுக்காக பெயர் பெற்றது. இதில் சிலர் மாத சம்பளம் வைத்து என்னால் முதலீடு செய்ய முடியவில்லை.. என்று நினைத்தாலும் காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒரு முறை என உங்கள் விருப்பத்திற்கு முதலீடு செய்யலாம். ஆனால் மாத SIP-கள் பெரும்பாலும் முதலீட்டாளர்களிடையே பிரபலமானது.ஆபத்து ஏற்பு திறன்: பங்குச் சந்தை இயல்பாகவே ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.

எனவே, நீங்கள் எவ்வளவு ஆபத்தை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். குறைந்த ஆபத்து ஏற்பு திறன் கொண்டவர்கள் அதற்குத் தகுந்த முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.முதலீட்டு கால அளவு: உங்கள் நிதி இலக்கு என்ன என்பதைப் பொறுத்தும், எத்தனை வருடங்களில் அடைய வேண்டும் என்பதைப் பொறுத்தும், SIP-ளில் முதலீடு செய்யும் தொகையைத் தீர்மானிக்கலாம். நீண்ட கால இலக்குகளுக்கு குறைந்த தொகையை தொடர்ந்து முதலீடு செய்வது கூட்டு வட்டியின் பலனை அடைய உதவும்.நிதி ஆலோசகரின் ஆலோசனை: உங்கள் நிதி இலக்குகள், ஆபத்து ஏற்பு திறன், மற்றும் நிதி நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு ஏற்ற SIP-களையும், முதலீடு செய்ய வேண்டிய தொகையையும் நிதி ஆலோசகரின் பரிந்துரையின்படி முதலீடு செய்யலாம். SIP-களில் முதலீடு செய்யும் சரியான தொகை என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். மேலே குறிப்பிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு சரியான தொகையைத் தீர்மானித்து முதலீடு செய்யுங்கள்.