Oppo Find N2 Flip விலை எவ்ளோனு தெரியுமா..?

Oppo நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் வெளியிட்ட மடிப்பு வசதி உள்ள Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் இந்திய மாடல் விலையை வரும் மார்ச் 13 அன்று அறிவிக்கவுள்ளது. இதனை ட்விட்டர் மூலமாக Oppo நிறுவனம் அறிவிக்கவுள்ளது. இதன் விலை அளவு சாம்சங் நிறுவனத்தின் Flip போனை மையப்படுத்தியே இருக்கும். இந்த போன் Oppo நிறுவனத்தின் தலைசிறந்த மாடலாக விற்பனை செய்யப்படும். சீனாவை சேர்ந்த Oppo நிறுவனம் இந்தியாவில் அதன் பிலிப் வகை போன் மாடலான Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனை பற்றிய அறிவிப்பை இந்தியாவில் மார்ச் 13 அன்று வெளியிடவுள்ளது. இதனை அறிவிக்க Oppo நிறுவனத்தின் சமூகவலைத்தளமான ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

ட்விட்டரில் Oppo நிறுவனம் “விலை அறிவிப்பு மார்ச் 13 அன்று வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது. இந்த போன் இந்தியாவில் புதுவிதமான Flip வகை போன்களுடன் சேர்த்து விற்பனை செய்யப்படும். இது நேரடியாக Samsung Flip போனிற்கு போட்டியாளராக உள்ளது. இந்த போனில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினிமும் பிரேம், மேட் கிளாஸ் பேக் உள்ளது. இதில் புதிய டிசைன் செய்யப்பட்ட Hinge Wave டிசைன் உள்ளதால் நாம் இதனை சுலபமாக மடிக்கமுடியும். இதில் பின்பக்கம் 3.26 இன்ச் கவர் டிஸ்பிலே, 17:9 பிரைமரி ஸ்க்ரீன் ரேஷியோ உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Moonlit Purple மற்றும் Astral Black என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதில் ஒரு மிகப்பெரிய 6.8 இன்ச் FHD+ 1080×2520 Pixel resolution ஸ்க்ரீன் உள்ளது. இதன் டிஸ்பிலே 120HZ Refresh Rate, 1600 நிட்ஸ் பிரைட்னஸ், 3.26 இன்ச் பின்பக்க AMOLED 382 x 720 Pixel ஸ்க்ரீன் உள்ளது.

கேமரா தேவைக்காக Oppo நிறுவனம் Hasselblad நிறுவனத்துடன் இணைந்து 50MP முக்கிய கேமரா, 8MP அல்ட்ரா வைட் கேமரா வசதி டூயல் கேமரா வசதியை வழங்கியுள்ளது. முன்பக்கம் செல்பி கேமெராவாக 32MP வழங்கப்பட்டுள்ளது. இந்த போல்ட் வகை போனில் Mediatek Dimensity 9000+ சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெற்றுள்ளது. இதில் Android 13 OS சார்ந்து உருவாக்கப்பட்ட Color OS 13 UI உள்ளது. மேலும் இதன் பேட்டரி 4300mAh என்ற அளவில் 44W வசதியுடன் வருகிறது.