‘துருவ நட்சத்திரம்’ படம் குறித்து அந்த படத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமையாக உணர்கிறேன். தற்போது கடைசி நாள் ஷுட்டிங் நடைபெறுகிறது. 6 வருடத்திற்கு பிறகு படம் வரும் மே மாதம் வெளியாகிறது” என குறிப்பிட்டுள்ளார். கவுதம்மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் இந்த படத்தின் ஷூட்டிங் 2017ல் தொடங்கியது. ஒரு சில காரணங்களால் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. மே மாதம் வெளிவருவதால் மீதமுள்ள படப்பிடிப்பினை படுவேகமாக எடுத்து வருகின்றன. தயாரிப்பாளரும் இதனை உறுதி செய்திருக்கிறார்.