இந்த விஷயம் தெரிஞ்சா… உடனே அம்மிக்கல், ஆட்டுக்கல் வாங்கிடுவீங்க..!

மகாலட்சுமியின் அம்சமான அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் சரியான திசையில் வைத்தால் மட்டுமே பண வருமானம் அதிகரிக்கும். கண்ட இடங்களில் அம்மிக்கல்லை வைத்து அரைத்தால் நம்மை அறியாமலேயே பணம் தண்ணீராக செலவாகும். அம்மிக்கல்லை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அம்மியில் அரைத்து வைத்த மசாலா வீடெல்லாம் மணக்கும். ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி சட்னி அரைத்து சாப்பிட்டால் ருசியோடு ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். இன்றைய அவசர யுகத்தில் நாம் அம்மியில் அரைப்பதையும் ஆட்டுக்கல்லில் ஆட்டுவதையும் விட்டு விட்டோம். சில பொருட்களை நம் முன்னோர்களுடைய நினைவாக நாம் இந்த காலத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பாதுகாத்து வருகிறோம்.

அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் மஹாலக்ஷ்மிக்கு இணையாக அந்த காலத்தில் பார்க்கப்பட்டது. அதில் கால் வைக்கவோ உட்காரவோ மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் புனிதமாகப் போற்றி பாதுகாத்து வந்தனர். மஞ்சள் பூசி பொட்டு வைத்து வழிபடுவார்கள். மிக்சி, கிரைண்டர் வந்த பிறகு பலர் வீடுகளில் அம்மிக்கல், ஆட்டுக்கல்லை குப்பை போல ஏதோ ஒரு மூலையில் போட்டு வைத்திருப்பார்கள். தெய்வாம்சம் பொருந்திய இந்த இரண்டு பழங்கால பொருட்களை சரியான திசையில் வைத்து நாம் பயன்படுத்தினால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும்.

உணவு ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அம்மிக்கல்லில் அரைத்து குழம்பு வைப்பார்கள் நம்முடைய பாட்டியும் அம்மாவும். உடலுக்கு எக்சர்சைஸ் ஆகவும் இருந்தது. ஆனால் இன்றைக்கு மிக்சி, கிரைண்டர் வந்த உடன் அம்மி, ஆட்டுக்கல்லை பயன்படுத்துவதில்லை. நாம் பயன்படுத்தாவிட்டாலும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதுவே வீட்டில் சுபிட்சத்தை கொடுக்கும். அம்மிக்கல் ஆட்டுக்கல்லை பாதுகாக்கும் தலைமுறையினர் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.

ஆட்டுக்கல், அம்மிக்கல்லை ஒருபோதும் நாம் நம்முடைய வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது. வடகிழக்கு என்பது வெட்ட வெளியாகவும் பாரம் இல்லாமலும் இருக்க வேண்டும். அந்த திசையில் வடகிழக்கு மூலையில் அம்மிக்கல்லை போட் டு வைத்தால் வருமானம் தடைபடும். வீட்டின் தென்மேற்கு பகுதி சமையல் அறை உள்ள தென்கிழக்கு பகுதியில்தான் அம்மிக்கல்லையும் ஆட்டுக்கல்லையும் போட்டு வைக்க வேண்டும்.

வீட்டின் தென்கிழக்கு மூலை தான் அம்மிக்கல், ஆட்டுக்கல் வைப்பதற்கு மிகச்சரியான திசையாக இருக்கும். வீட்டில் மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் தென்கிழக்கு பகுதியில் இவற்றை வைத்து பாதுகாத்து வந்தால் நல்லது நடக்கும். அப்படி இல்லாமல் உங்கள் வீட்டில் பின்புறத்தில் இடம் இருந்தால் தாராளமாக அங்கு நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

வீட்டிற்குள் வைப்பதை விட வீட்டிற்கு பின்புறத்தில் வைப்பது நல்ல பலன்களை தரும் என்பார்கள். எந்த திசையில் வைத்தாலும் வடகிழக்கு திசையில் மட்டும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாமல் கூட அம்மிக்கல்லை இந்த திசையில் வைத்திருந்தால் உடனே திசையை மாற்றுங்கள். பணக்கஷ்டம் நீங்கும்.