பெருங்காயம் சிறந்த ஒரு வாயு நீக்கிய செயல்படுவதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான பருப்பு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பெருங்காயத்தில் குறிப்பிடத் தக்க பல மருத்துவ குணங்களும் உள்ளன. குறிப்பாக இது செரிமானத்திற்கு உதவுகிறது. பெருங்காயம் வாய்வு, மலச்சிக்கல் மற்றும் செரிமானத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. பெருங்காயம் ஃபெருலா செடியின் தண்டு மற்றும் வேர்களின் உலர்ந்த சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பசை போன்ற ஒரு பிசின் தான் பெருங்காய கட்டி மற்றும் தூளாக கடைகளில் விற்கப்படுகிறது.
இந்தியாவில் குறிப்பாக காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில் பெருங்காயமானது பயிரிடப்படுகிறது. தினசரி பெருங்காயத்தை உணவில் சேர்க்கும் போது ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை சரி செய்ய உதவுகிறது. பெருங்காயம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் தமனி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் குடல் வாயு, வீக்கம் மற்றும் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் பிடிப்புகள் மற்றும் சளி வெளியேற்றம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.