பொதுவாக ஓமம் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. மேலும் ஓமத்தை எந்தெந்த பிரச்சினைக்கு யூஸ் பண்ணலாம் என்று பார்க்கலாம்.
1. அஜீரண தொல்லையால் அவதிபடுவோர் ஓமம் (Omam) சிறிதளவு உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் அஜீரண பிரச்சினைகள் குணமாகி விடும்
2. ஆஸ்துமா மற்றும் தலை வலியால் அவதிப்படுவோர் ஓமம் தூள் சாப்பிட்டால் தலைவலியை குணப்படுத்தும். மேலும் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை இந்த ஓமம் சரியாக்கும்
3. தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுவோர் அரை டீஸ்பூன் ஓமம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் நெஞ்சு சளியை வெளியேற்றி நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4. பசி எடுக்காமல் இருப்போருக்கு பசியைத் தூண்டும் பண்புகள் மற்றும் ஓமம் குடல் இயக்கத்தை வேகப்படுத்துகின்றன, மேலும் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.
5. சிறிதளவு தண்ணீர் எடுத்து இதில் ஒரு கரண்டி ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து விடவும்
6. பின்னர் 100 மி. லி தேங்காய் எண்ணெய் விட்டு மீண்டும் கொதிக்க வைத்து வடி கட்டி எடுத்து அதில் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞசூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால் இடுப்பு வலி பிரச்சினை நீங்கி ஆரோக்கியம் மேம்படும்