கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியாகும். தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள ‘Relationship Manager’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sales பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
பதவி: Relationship Manager
கல்வித் தகுதி : குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். விற்பனைப் பிரிவில் ஆர்வம் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்: வங்கியின் கொள்கை மற்றும் திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2023
விண்ணப்பிப்பது எப்படி: கரூர் வைஸ்யா வங்கியின் இணையதளமான https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp லிங்கை கிளிக் செய்யவும்.
அதில் உள்ள அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள https://drive.google.com/file/d/1cdJ1EGylrfBTulrl7RJGHE046vlb2LtB/viewஎன்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கவும்.
நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம், மற்றும் தமிழ் மொழியில் நன்கு பேச எழுத தெரிந்திருக்க வேண்டும்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கரூர் வைஸியா வங்கியின் கிளைகளில் நியமிக்கப்படுவர்.