சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட்..!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2023-24 நிதியாண்டு தொடங்கியுள்ளது. எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அவ்வகையில், நாட்டின் மூத்த குடிமக்களான சீனியர் சிட்டிசன்களுக்கு அமலுக்கு வந்துள்ள சில புதிய விதிமுறைகளை பார்க்கலாம்.

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்

அஞ்சலக சிறு சேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு (Senior citizen saving scheme) அதிகபட்ச முதலீட்டு வரம்பு 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சீனியர் சிட்டிசன்கள் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து பயன்பெறலாம்.

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் வட்டி

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு வட்டி விகிதம் 8.20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, முதலீட்டு வரம்பு உயர்வு, வட்டி உயர்வு என சீனியர் சிட்டிசன்களுக்கு ஏப்ரல் முதல் டபுள் ஜாக்பாட் கிடைக்க இருக்கிறது.

ஆதார் – பான் கட்டாயம்

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இனி ஆதார் – பான் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆதார் – பான் விவரங்களை வழங்காதவர்களும் செப்டம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.