ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டவிரோதமாக நடக்கம் இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றும் இ-சிகரெட்டுகளில் உள்ள வேதிப்பொருட்கள் பலவகையான புற்றுநோய், இதயநோய்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.