ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- பொதுமக்கள் அச்சம்

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 6.45 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 4.9, 4.8 என பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுலா என்ற பகுதியில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பூமிக்கு 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.