தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு…
* முட்டை – 5-6
* உப்பு – சிறிது
* தண்ணீர் – தேவையான அளவு
லாலி பாப் செய்வதற்கு…
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மைதா – 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – சிறிது
* பிரட் தூள் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை போட்டு, அதில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, சிறிது கல் உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர வைத்து, அதன் ஓட்டை நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் வேக வைத்த முட்டைகளை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மைதா மாவை சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து, நீர் ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள ண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு உருட்டியதை சோள மாவு கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் போட்டு நன்கு பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பின்னர் அந்த உருண்டையின் மேல் ஒரு டூத்பிக் குச்சியை சொருகினால், சுவையான முட்டை லாலிபாப் தயார்.