தமிழக மின்வாரியம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 செப்டம்பர் 10ம் தேதி முதல் புதிதாக மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அரசின் பண தேவைகளை சமாளிக்கும் வகையில் இந்த மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 2026 – 27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பண வீக்க விகிதம் அல்லது 6 % இவற்றில் எது குறைவோ அந்த அளவு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் 4.70% ஆக உள்ளது. இதனால் ஜூலை 1ம் தேதி முதல் தமிழகத்தில் கூடுதலாக 4.70% மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது.