Gmail, Apple mailஐ ஒழித்துக்கட்ட எலான் மஸ்க் திட்டம்... அதிர்ச்சியில் கூகுள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு கூகுள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் ஊடகத்தை வாங்கிய பின்னர் பெயர் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
தற்போது கூகுளுக்கு போட்டியாக மஸ்க் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, மின்னஞ்சல் செயலியான Gmailஐ காலி செய்யும் வகையில் Xmail எனும் மின்னஞ்சல் அம்சத்தை கொண்டுவருவதாக அவர் சூசகமாக கூறியுள்ளார்.
DogeDesigner என்ற பெயரில் இயங்கும் X கணக்கில் வெளியான, “Xmail நன்றாக இருக்கும்” என்ற பதிவு இணையத்தில் வேகமாக வைரலானது.
எலான் மஸ்க்கும் இதனை ரீடிவீட் செய்து, “ஆம், செய்ய வேண்டிய விடயங்கள் பட்டியலில் உள்ளன” என குறிப்பிட்டார்.
உலகளவிலான மின்னஞ்சல் சந்தையில் ஆப்பிள் மெயில் 53.67 சதவீத பங்கையும், ஜிமெயில் 30.70 சதவீத பங்கையும் கொண்டுள்ளன என Times now world தெரிவித்துள்ளது.
எனினும், எலான் மஸ்க்கின் புதிய மின்னஞ்சல் அம்சம், Gmail மற்றும் Apple mail இரண்டிற்கும் ஒரு கடுமையாக போட்டியாளராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.