சென்னையில் ஜனவரி 20ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பயிற்சி துறை அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
நடைபெறும் தேதி: 20.02.2023
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
யார் யாருக்கெல்லாம் வேலைவாய்ப்பு
இதில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் பங்கேற்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in-இல் பதிவு செய்ய வேண்டும்.
முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப்பதால், வேலைத் தேடுபவர்கள் இதை பயன்படுத்திகொள்ளுமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.