தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு…!

தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில், தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு வரும் பிப்ரவரி மாதம் 10 -ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

(i) வேளாண் அலுவலர்(விரிவாக்கம்)

(ii) வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்)

(iii) தோட்டக்கலை அலுவலர்

மொத்த பணியிடங்கள் : 93

கல்வித் தகுதி:

வேளாண்மை துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • வேளாண்மை அலுவலர் – மாதம் ரூ. 37,700 – 1,38,500/-
  • வேளாண்மை உதவி இயக்குநர் – மாதம் ரூ. 56,100 – 2,06,700/-
  • தோட்டக்கலை அலுவலர் காலியிடங்கள்: மாதம் ரூ. 37,700 – 1,38,500/-

 வயதுவரம்பு:

1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு: 

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ. 150/- (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

தேர்வு மையங்கள்:

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்

விண்ணப்பிப்தற்கான இணையதளம்:

www.tnpscexams.in / www.tnpsc.gov.in – என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

தேர்வு நடைபெறும் நாள்: 20.05.2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023

https://www.tnpsc.gov.in/Document/tamil/01_2023_Agri%20and%20Horti_Tamil.pdf – என்ற இணையதளத்தில் அறிவிப்பின் விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.