இந்தியாவில் மக்கள் எதிர்காலத்தில் ஏற்படும் பண தேவைகளை சமாளிக்க பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அதில் முக்கியமான 3 திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் நாடு முழுவதும் ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF), பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என பல திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதனை தெரிந்து கொண்டு உங்களின் தேவைக்கு தகுந்தாற் போல திட்டங்களை தேர்வு செய்யலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund – EPF)
இந்த திட்டம் கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலாளி மற்றும் பணியாளர் என இருவரும் இருக்கின்றனர். தொழிலாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு சம்பள கட்டமைப்பின் படி நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படும் போது, நபர் ஓய்வு பெறும் வயதை அடைந்தவுடன் மட்டுமே முழு கார்பஸ் வெளியிடப்படும். மொத்தத்தில் ஓய்வூதியம் தேவைப்படுவோருக்கு இந்த திட்டம் பொருத்தமானது ஆகும்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF)
இந்த திட்டம் மாதாந்திர பங்களிப்பை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் அதிக தொகையை வழங்கலாம். அது மட்டுமில்லாமல் ஊழியர்கள் தங்களின் பிற வருமானத்தை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். 5 ஆண்டுகளுக்கு பின் பணம் எடுத்தாலும் வரி பிடித்தம் செய்யப்படாது.
தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (Voluntary Provident Fund – VPF)
தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) இரண்டும் ஒரே மாதிரியானவை. VPFல் தானாக முன் வந்து கூடுதல் பணத்தை சேர்ப்பதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) ஆகியவற்றில் பெரும்பாலான தனிநபர்களுக்கு ஒரு நிதியாண்டில் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஈட்டிய வட்டிக்கு வரி விதிக்கப்படாது. இந்த 3 திட்டங்களும் ஆபத்து குறைந்தவை என்பதால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்யலாம்.