ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,470 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,058 ஆகவும் உள்ளது.
கடந்த மாதத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட தங்கத்தின் விலையில் சில நாட்களாக ஏற்றம் இருந்து வருகிறது. அதன்படி இந்த மாதம்.. அதாவது ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு கணிசமாக தங்கம் விலை உயர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் எல்லாம் இல்லாத அளவுக்கு 7-ஆம் தேதி அன்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 25 ரூபாய் அதிகரித்து 6,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் அதிகரித்து 51,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து 7,058 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 216 ரூபாய் அதிகரித்து 56,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது ஆடி மாதம் என்பதால் திருமண சீசன் எதுவும் இருக்காது. ஆனால் இனி வரும் மாதங்கள் திருமண சீசன் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தை காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. இதனாலும் டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படலாம். எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே ஆலோசித்து தங்க விலை குறைவாக இருக்கும் சமயத்தை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.