மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைமை!

கடலுக்குள் பேனா நினைவிடம் வைப்பதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதுடன், கடலின் உயிர்பன்மை பாதிப்படையும் அபாயம் உள்ளது. 

 

கடலுக்குள் பேனா! நினைவிடம் வைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் :

 

மீனவர்கள் வாழ்வாதாரம்! 34 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் திட்ட அமைவிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி நடவடிக்கை நடைபெறவில்லை என EIA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பங்குனி ஆமைகளுக்கு ஆபத்து!

 

கடல் நடுவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை  அழிந்து வரும் உயிரினமாக IUCN அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்குனி ஆமைகளின் (Olive Ridley Turtle) வாழிடமாகவும் முட்டையிடும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது.

 

கடல் உயிர்பன்மைய பாதிப்புகள்!

 

முகத்துவாரத்தின் அருகில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தினால் மீன்கள், ஆமைகள், கடல் உயிர் சூழல் அழியும் ஆபத்து உள்ளது. 130மீ தூரத்தில் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. முகத்துவாரப் பகுதியில் தான் மீன்கள் அதிகம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

 

அழியப்போகும் மீனவ கிராமங்கள்!

 

மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் கட்டப்பட்டால் அருகாமையில் உள்ள பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும். கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கு கடலில் இந்த திட்டம் அமைய இருப்பதனால் கடலை ஆழப்படுத்தி ஆழ்துளைகளிட்டு தூண்கள்அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே துறைமுகம் கட்டியதன் விளைவாக ஆண்டிற்கு 20 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பை வட சென்னை சந்தித்து வருகிறது.

 

சுருங்கும் மெரினா?

 

ஆனால், பேனா நினைவுச் சின்னதிற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிகையில் கடல் மட்ட உயர்வு தொடர்பான எந்த தரவுகளும் இல்லை. 2022 ம் ஆண்டு சென்னை மாநகராட்சி வெளியிட்ட சென்னைக்கான காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையில் அடுத்த 5 ஆண்டுக்குள் ஏற்படப் போகும் கடல் மட்ட உயர்வால் 100 மீட்டர் கடற்கரை நீருக்குள் மூழ்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : பூவுலகின் நண்பர்கள்